வணக்கத்திற்குரிய துனணவந்தர் மஹாபாத்யாய தேரர்) பதவிக்கான விண்ணப்பங்கள் / பெயர் முன்மொழிவுகள் கோருதல்
விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அடிப்படைத் தகைமைகள் :
- ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இலங்கை குடியுரிமைக் கொண்டவராகவும், விண்ணப்பங்கள் கோருகின்ற இறுதி திகதியில் 62 வயதுக்கு மேற்படாமலும், உபசம்பதா என்ற பதவியில் பத்தாண்டு நிறைவு செய்த தேரராகவும் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் உள்ளக விண்ணப்பதாரர் என்றால், பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ள கெளரவ கலாநிதி பட்டப்படிப்பு அல்லாத கலாநிதி பட்டடிப்படிப்புடன் கூடிய தர்மம் (தர்மதர), சீலத்துடன் கூடிய (வினயதர) தேரராக இருத்தல் வேண்டும்.
- வெளியக விண்ணப்பதாரர் என்றால், பெளத்த மற்றும் பாலி கற்கை துறையில் சிறந்த தகைமைகளைக் கொண்டு, ஏற்புடைய விடய துறையில் கெளரவ கலாநிதி பட்டப்படிப்பு அல்லாத கலாநிதி பட்டடிப்படிப்புடன் கூடிய தர்மம் (தர்மதர) சீலத்துடன்கூடிய (வினயதர) தேரராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பங்கள் அல்லது பெயர் முன்மொழிவுகள் 2025.01.27 ஆம் திகதி பி.ப.3.00 மணி அல்லது அதற்கு முன்பாக “பதிவாளர், இலங்கை பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், இலக்கம் 37, மொரகஹஹேன வீதி, பிட்டின நகரம், ஹோமாகம” என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்பதற்கு அல்லது தனிப்பட்ட வகையில் வருகைதந்து கையளிப்பதற்கு இயலுமாகும். குறித்த ஆவணங்களின் மென் பிரதிகளை registrar@bpu.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
2025.01.27 ஆம் திகதி பி.ப.3.00 மணிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் அல்லது பெயர் முன்மொழிவுகள் எதுவும் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்கள் அல்லது பெயர் முன்மொழிவுகள் உரிய கடித ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “வணக்கத்திற்குரிய துணைவேந்தர்!(மஹோபாத்யாய தேரர் பதவி)” என்று குறிப்பிடுதல் வேண்டும்.
0768814965